சென்னை: மாரி செல்வராஜை ஆச்சரியப்படுத்திய சிம்பு.. அப்படி என்ன சொன்னார் தெரியுங்களா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது.படம் வெளியான 10 நாட்களில் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “சிம்பு சார் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ‘நாம் தொடர்ந்து வேலை செய்ய செய்ய நம்மை அறியாமலேயே அற்புதத்தை நிகழ்த்தக்கூடிய ஆளாக மாறிவிடுவோம்.
அதன்பின், நாம் என்ன செய்தாலும் அது அற்புதத்தை நோக்கித்தான் நகரும். பைசனில் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது’ என்று கூறினார் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.