மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், 2023 ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவை விவாகரத்து செய்ததாக அறிவித்தார். இதற்குப் பின்னர், தங்கல் படத்தில் அவருடன் நடித்த பாத்திமா சனா ஷேக் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால், இருவரும் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தனர்.

தற்போது, தனது 60ஆவது பிறந்த நாளில், அமீர்கான் தனது காதலியான கௌரி ஸ்ப்ராட் என்பவரை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். கௌரி, அமீர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, கௌரியும் ஏற்கனவே திருமணமாகி, பின்னர் விவாகரத்து செய்தவர். அவருக்கு ஆறு வயது மகன் உள்ளார். அமீர்கான், இருவரும் கடந்த 18 மாதங்களாக காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமீர்கான் தனது மதுப்பழக்கத்திற்குட்பட்ட தருணங்களை பகிர்ந்துள்ளார். கிரண் ராவை திருமணம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், அமீர்கான் தனது முதல் மனைவியான ரீனா தட்டாவை விவாகரத்து செய்திருந்தார்.
விவாகரத்துக்கு பிந்தைய மன அழுத்தத்தால், தினமும் ஒரு லிட்டர் மது குடிக்கும் அளவுக்கு அமீர்கான் மதுவுக்கு அடிமையானதாக கூறியுள்ளார். இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
முன்பு வரை டீ டோட்டலராக இருந்த அமீர்கான், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக மதுப்பழக்கத்துடன் போராடியதாக கூறியுள்ளார். ஆனால், பின்னர் மதுப்பழக்கத்தை விட்டுவிட்டு மீண்டும் திரும்பி வந்து தன்னுடைய வாழ்க்கையில் உறுதியுடன் செயல்பட தொடங்கியுள்ளார்.
அமீர்கான் பகிர்ந்த இந்த தன்னம்பிக்கை மிகுந்த வாழ்க்கை அனுபவம், அவரது ரசிகர்களுக்கு புதிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.