நடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தபின், 2021-ம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியுடன் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இரண்டாவது மனைவியான ஜுவாலா கட்டா சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தைக்கு ஈற்றுக்கொடுத்தார்.

அந்த மகளின் பெயர் சூட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குழந்தைக்கு “மிரா” என அழகான பெயர் சூட்டி, அன்பும் அமைதியும் கொண்ட ஒரு அர்த்தத்துடன் அந்த பெயரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கான நெகிழ்ச்சியான பதிவை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அமீர்கானுக்கு மனமார்ந்த நன்றியும் தெரிவித்தார். இந்த சிறப்பான தருணம் திரையுலகிலும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.