உலக அழகி என்று மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தினாலும் தமிழ் சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வந்தார். இவர் நடித்த ஜீன்ஸ், கண்டு கொண்டாண் கண்டு கொண்டாண், ராவணன், எந்திரன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டானது.
ஐஸ்வர்யா ராயின் கடைசி தமிழ் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராய் சினிமாவில் ஜொலித்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வப்போது பல வதந்திகளுக்குளானார். இவர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இதற்கிடையில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவி வருகின்றன.
தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அபிஷேக் பச்சன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், நானும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொண்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என்றும், பிரபலங்கள் என்பதால் அடிக்கடி இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனர், எனக் கூறியுள்ளார்.