இந்தி நடிகர் அமீர் கான் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் நடிக்கிறார். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் 20 அன்று வெளியிடப்பட்டது. இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மனநலம் குன்றியவர்களுக்கான கூடைப்பந்து பயிற்சியாளராக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமீர் கான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக இந்தப் படம் சொல்கிறது. இந்தச் சூழலில், நடிகர் அமீர் கான் ஜனாதிபதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை ஜனாதிபதி அலுவலகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சந்திப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.