சென்னை ; பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இனி இதுபோல் நடக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்.
எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் அஜித்குமார், மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்..