திருவனந்தபுரம் : மரண மாஸ் படத்தின் இயக்குனர் பசில் ஜோசப் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் வெளியான கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கிய பசில் ஜோசப், தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார். அதன்படி, ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’, ‘குருவாயூர் அம்பல நடையில்’ படங்களில் இவர் நடிப்பு பேசப்பட்டது.
இந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் படத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மரணமாஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பசில் ஜோசப் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போழுது அட்லீ இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.