சென்னை: படத்தொகுப்பாளர் மோகனின் இளைய மகன் நடிகர் ரவி. ‘ஜெயம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், ‘ஜெயம் ரவி’ என்ற புனைப்பெயருடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குனர். நடிகர் ஜெயம் ரவி, திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை 2009-ல் காதலித்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி தனது திருமண வாழ்க்கையை தனது மனைவியுடன் விட்டுவிடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “எனது மனைவியிடமிருந்து அவருக்கு விவாகரத்து வழங்க வேண்டும். 2009-ல் நடந்த இவர்களது திருமணம் செல்லாது என அறிவித்து, பதிவை ரத்து செய்ய வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு, வரும், 10-ல், விசாரணைக்கு வருகிறது. சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை 2009-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஜெயம் ரவி அதை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் மனம் உடைக்கும் தனிப்பட்ட செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தியுடன் என் திருமணத்திலிருந்து விலகிச் செல்வது என்ற கடினமான முடிவை எடுத்தேன். இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை.
சார்ந்திருப்பவர்களின் நலன் மற்றும் அவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டது. இது என்னுடைய சொந்த முடிவு. இந்த விவகாரம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்றார்.