நடிகர் பிரபாஸ் தற்போது ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கிய இந்த ஹாரர் காமெடி படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. சண்டைக் காட்சியில் நடித்தபோது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கட்டாய ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏ.டி.’ படம் அடுத்த மாதம் 3-ம் தேதி ஜப்பானில் வெளியாகிறது. அங்கு இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவிருந்தார். இந்த காயம் காரணமாக அவர் ஜப்பான் செல்லவில்லை. இதற்காக அந்நாட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.