மும்பை: சாரா அர்ஜுனிடம் தவறாக நடந்தேனா என்று தன்னை பற்றிய சர்ச்சைக்கு இந்தி நடிகர் பதில் அளித்துள்ளார்.
தமிழில் தெய்வ திருமகள் சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பவர் சாரா அர்ஜுன். தற்போது சாரா அர்ஜுன் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் துரந்தர் என்ற ஹிந்தி படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்து இருந்தார்.
துரந்தர் படத்தின் விழாவில் சாராவிடம் தொட்டு தவறாக நடந்துகொண்டதாக நடிகர் ராகேஷ் பேடி என்பவரது வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதை தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர்.
அது பற்றி தற்போது நடிகர் ராகேஷ் பேடி விளக்கம் கொடுத்து இருக்கிறார். “சாரா படத்தில் என் மகளாக நடித்து இருந்தார். ஷூட்டிங்கில் எப்போது சந்தித்தாலும் ஹக் செய்து தான் வணக்கம் சொல்வார். இது அப்பா மகள் போன்று தான். அன்றும் அப்படி தான் செய்தேன். ஆனால் மக்கள் தான் அதை வேறு விதமாக பார்கிறார்கள். அவர்கள் தவறாக பார்த்தால் என்ன செய்ய முடியும்” என அவர் கோபமாக பதில் அளித்துள்ளார்.