சென்னை: 3 BHK படத்தை பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நடுத்தர குடும்பத்தை மையமாக கொண்ட சித்தார்த்தின் சமீபத்திய படமான ”3பிஎச்கே”, பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், ஒரு நிகழ்வில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 3பிஎச்கே படத்தை பார்த்ததாகவும் அதை ரசித்ததாகவும் கூறினார்.
“எனக்கு நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் 3பிஎச்கே மற்றும் அட்டா தம்பாய்ச்சா நாய் ஆகிய படங்களை பார்த்து ரசித்தேன்” என்றார்.
இந்த நிலையில், சச்சினுக்கு சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அன்புள்ள சச்சின் ஜி, எங்கள் தமிழ் திரைப்படமான 3பிஎச்கே படத்தை பாராட்டியதற்கு நன்றி . 3பிஎச்கேவின் ஒட்டுமொத்த குழுவும் இந்த அங்கீகாரத்திற்காக மகிழ்ச்சியடைகிறது. என தெரிவித்துள்ளார் .