சென்னை: மைலார்ட் என்ற படத்தில் சசிகுமாரும், இயக்குனர் ராஜுமுருகனும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ஆர்யா – அனுராக் காஷ்யப் – கன்னட இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி – தெலுங்கு இயக்குனர் கிரீஷ் ஜகர்லமுடி – மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி ஆகிய ஐந்து மொழி பிரபலங்கள் வெளியிட்டனர்.
ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மை லார்ட் ‘ படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குனர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். அம்பேத்குமார் வழங்குகிறார்.