சென்னை: நடிகர் கிங்காங் மகள் திருமணத்திற்கு செல்ல முடியாத நிலையில் அவரது வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் கிங் காங் தனது மகள் திருமணத்தை சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். அந்த திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
கிங் காங் குடும்பத்தை சந்தித்து அவர் மணமக்களை வாழ்த்தி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். திருமணத்திற்கு வரவேற்பு வைத்தவர்கள் யாரும் வரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது கிங்காங் வீட்டிற்கே சென்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மற்ற நடிகர்களும் படப்பிடிப்பில் இருப்பதால் இனிமேல் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.