சென்னை: மகாராஜா திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் 100 கோடியை வசூலில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். அவர் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். நல்ல கதையுடைய திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல திரைப்படத்தை பார்த்தால் அப்படக்குழுவினரை நேரில் அழைத்தோ, தொலைப்பேசியில் அழைத்தோ பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.