திருச்சி: திருச்சிக்கு வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் தான் படித்த பள்ளியில் உருக்கமாக மாணவர்கள் மத்தியில் பேசினார். நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்தார்.
அந்தப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “நான் இந்த பள்ளிக்கு என் தந்தையுடன் வந்திருக்கிறேன்.
இன்று நானே இந்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பதை என் தந்தைக்கு சொல்ல விரும்புகிறேன்” என்று மறைந்த அவரது தந்தை குறித்து உருக்கமாக பேசினார்.
மாணவர்கள் மத்தியில் சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக பள்ளி நிர்வாகம் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.