சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. யாருமே எதிர்பார்க்காத ஒரு கூட்டணி அமைந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது படுபிஸியான ஹீரோவாக மாறி இருக்கிறார். சுதா கொங்கரா உடன் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மதராஸி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.
அந்த இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
சூர்யாவின் ரெட்ரோ படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக்கு சுப்புராஜ் அதன் ரிலீஸுக்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.
சிவகார்த்திகேயன் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி படம் உறுதியானால் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.