சென்னை: நம்மாழ்வாரின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சௌந்தரராஜாவின் நிலம் மற்றும் மக்கள் அறக்கட்டளை, 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தியது.

சௌந்தரராஜா பேசுகையில், “விவசாயிகளை கவுரவிப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமாக உணர்கிறேன். இது முதல் படிதான். இனிமேல் இந்த பணி தொடரும். நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் அமைத்து தமிழக பாடப்புத்தகத்தில் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாறுகளை சேர்க்க தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மரங்களை நடுவதை விட, அவற்றை பராமரிக்க வேண்டும். மேலும் மரங்களை நட்டு நீர்நிலைகளை பாதுகாப்பதே எனது நோக்கம்,” என்றார். நிகழ்ச்சியில் நம்மாழ்வாரின் நண்பரும் நெல் ஜெயராமனின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.