சென்னை: நடிகர் உதயா நடிக்கும் படத்திற்கு அக்யூஸ்ட் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘திருநெல்வேலி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயாவுக்கு இது 25-வது ஆண்டு. இப்போது அவர் நடிக்கும் படத்துக்கு ‘அக்யூஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அஜ்மல், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஜேசன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் எம் ஐ ஒய் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம். தங்கவேல் தயாரிக்கும் இப்படத்தைப் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார்.
கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படிப் பாதிப்படைகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. கோடையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.