சென்னை: குபேரா படத்துக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா தனுஷ், ரஷ்மிகாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு நடிகர் தனுஷ் நன்றி விஜய் என பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் குபேரா. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
சேகர் கம்முலா இதனை இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் ரிலீஸையொட்டி ப்ரோமோட் செய்ய அடுத்தடுத்து நிகழ்வுகளை ‘குபேரா’ படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 16ம் தேதி இதன் டிரைலர் வெளியானது. இதனைப் பகிர்ந்த விஜய் தேவரகொண்டா, “விரைவில் வெளியாகும் குபேரா படத்துக்கு வாழ்த்துகள்.
எனது சினிமா பயணத்தில் சேகர் கம்முலா சார் எப்போதும் சிறப்பானவர். என்னைப் போல பல நடிகர்களுக்கு அவர் நம்பிக்கையை அளித்துள்ளார். இந்த அளவுக்கு பெரிய பட்ஜெட்டில் எனக்குப் பிடித்த தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகாவுடன் படத்தை இயக்கியுள்ளது ஆர்வத்தைக் கூட்டியுள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள். திரையில் பார்க்க் ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.
இதற்கு நடிகர் தனுஷ், “நன்றி விஜய்” எனக் கூறியுள்ளார்.