மும்பை: கைக் குழந்தையுடன் நடிகை தீபிகா படுகோன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி செம வைரலானது. ஆனால் அது உண்மையான படம் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இதுவரை அவர்கள் அக்குழந்தை படத்தை வெளியிடவில்லை.
இந்நிலையில், தீபிகா படுகோன் கைக்குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவானது. இதேபோல், டிசம்பரிலும் போலி படம் வைரலானது.
ஏ ஐ தொழில் நுட்பம் பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளது. நல்லதற்காக உருவாகும் தொழில்நுட்பங்கள் பல்வேறு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.