சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கிருத்திகா அண்ணாமலை, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில் சந்திரகலா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யூடியூப் பேட்டியில், கிருத்திகா மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பேட்டியில், அவரது தோழர்கள் சொன்னது போல, ஸ்கின் க்ளோவுக்காக தினமும் சிறிது அளவு Wine குடிக்க ஆரம்பித்தார். 22வது வயதில் முதல் இது பழக்கமாக உள்ளது. அதிகமாக குடித்தால் தீங்கு, சிறிதாக குடித்தால் சரியான விளைவு கிடைக்கும் என கிருத்திகா கூறினார்.
அந்த பேட்டியில், கமலேஷுடன் கடந்த அனுபவங்கள் மற்றும் பரபரப்பான சம்பவங்களை குறித்தும் அவர் பேசியுள்ளார். கமலேஷ் மீது சிறிய க்ரஷ் இருந்தது, ஆனால் காதல் அல்ல என கூறினார். இதுபோல், கிருத்திகா ரசிகர்களிடம் வெளிப்படையாக தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதுடன், ரசிகர்கள் கருத்தில், அழகுக்காக பெண்கள் Wine குடிக்கலாமா என்பதும் விவாதமாகி உள்ளது. கிருத்திகா தனது தனித்துவமான அணுகுமுறையால் புதுமைப்பெண் என பாராட்டப்படுகிறார்.