சென்னை: வதந்திகள் வெறுப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன. முட்டாள்களால் பரப்பப்படுகின்றன, முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று தன்னை பற்றி உலா வரும் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை மீனா.
நடிகை மீனா 90களில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவருக்கு தற்போதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதற்கு பிறகு மீனா பற்றி பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக மீனா இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார் என ஒரு கிசுகிசு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி பிரபல ஹீரோ உடன் மீனா பெயரை இணைத்து காதல் கிசுகிசுவையும் சிலர் உலவ விடுகின்றனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது மீனா பதிவிட்டு இருக்கிறார். அதில் வதந்திகள் வெறுப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன. முட்டாள்களால் பரப்பப்படுகின்றன, முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என கூறி இருக்கிறார்.