மும்பை: நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள’எமெர்ஜென்சி’ படம் ஒரு மாஸ்டர் பீஸ் -மிருணாள் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத் இயக்கி, நடித்துள்ள ‘எமெர்ஜென்சி’ படம் ஒரு மாஸ்டர் பீஸ் என நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளதாவது:
“நான் என் தந்தையுடன் ‘எமெர்ஜென்சி’ படம் பார்த்தேன். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திரைக்கதை, வசனம், இசை, எடிட்டிங் என அனைத்துமே சிறப்பாக இருந்தது. கங்கனா, நீங்கள் ஒரு நடிகை மட்டுமல்ல, ஒரு உண்மையான கலைஞர்” என பாராட்டியுள்ளார்.