நித்தேஷ் திவாரி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். ஆரம்பத்தில், ஸ்ரீநிதி ஷெட்டியும் இந்த பாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு சென்றிருந்தார். ஆனால், ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மாபெரும் வெற்றியால், தன்னை சீதாவாக ஏற்க மாட்டார்கள் என்று நினைத்து மீண்டும் படக்குழுவை அணுகவில்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதற்கு பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, “நான் சீதை வேடத்திற்கு மட்டுமே ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். அதன்பிறகு படக்குழுவினரிடம் இருந்து எனக்கு வேறு எந்த தகவலும் வரவில்லை. அந்த வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார் என்று மீடியா மூலம் தெரிந்துகொண்டேன்.

ஆனால் எனக்கு பதிலாக சாய் பல்லவியை நடிக்க வைத்தது போல் மீடியாக்கள் கட்டமைத்த விதம் முற்றிலும் தவறானது” என்றார்.