சென்னை: நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள கணக்கு மர்ம நபர்களால் Hack செய்யப்பட்டுள்ளது. அதில் சில கிரிப்டோ கரன்சி குறித்த பதிவுகளும் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் STORY பதிவிட்டுள்ள த்ரிஷா, எனது டுவிட்டர் கணக்கு Hack செய்யப்பட்டுள்ளது. அது மீட்கப்படும்வரை அதிலிருந்து வெளியாகும் எந்த பதிவுகளும் நான் போட்டது இல்லை, நன்றி என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்ட POSTகளும் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தொடர்ந்து பிரபலங்களின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை கஸ்தூரி தனது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.