மலையாளத்தில் ஹேமா கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட்குறித்த கேள்விக்கு நடிகை கஸ்தூரி ஆவேசமாக பதிலளித்துள்ளார். நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்காக சினிமாவுக்கு வருவதில்லை, அவர்கள் கஷ்டப்பட்டு, மேக்கப் போட்டு, வெயிலிலும் மழையிலும் கடுமையாக உழைக்கிறார்கள்.
மேலும், “பொம்பள சோக்கு வேண்டும் என்றால் இயக்குனரும், தயாரிப்பாளரும் வேறு இடங்களுக்கு சென்று இருப்பார்கள் .சினிமா என்பது முற்றிலும் வேறுபட்டது.கேமரா முன் நிஜ வாழ்க்கையில் நடிகைகள் இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு. ”
கிளாமர் நடிகைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர்கள் சமூகத்தால் தூற்றப்படுவதாகவும், நிம்மதியாக சாப்பிடக் கூட முடியாது என்றும் அவர் கூறினார்.
சமூகத்தில் எப்போதும் ஆண்களையே குற்றம் சொல்லாமல் பெண்களுக்கு சரியாக நடக்க வேண்டும் என்று சேற்றை வாரி பூசும் சூழ்நிலை உள்ளது என்றார் கஸ்தூரி.