‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், மீண்டும் அஜித் குமார் நடித்த புதிய படமான ‘ஏகே 64’யை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். படத்தின் விவரங்கள் இணையத்தில் ஒவ்வொரு நாளும் லீக் ஆக, அந்த ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது.

‘குட் பேட் அக்லி’ போலவே ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வேண்டும் என ‘ஏகே 64’யை எதிர்நோக்கும் பார்வை உருவாகியுள்ளது. இந்நிலையில் புதிய தகவல்களின் படி, இந்தப் படத்திற்கு அஜித்துக்கு ரூ. 180 கோடி சம்பளமாக பேச்சு நடைபெற்று வருகிறதாம். தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இப்படத்தை உருவாக்க, ரூ. 275 கோடி வரையிலான பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது கார் ரேஸிங் போட்டிகளில் பிசியாக இருப்பதால், படக்குழு தயாரிப்புகளை மெதுவாக முன்னெடுத்து வருகிறது. இதில், அஜித்துக்கு ஜோடியாக பான் இந்திய நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கேஜிஎஃப்’ திரைப்படத்தால் பிரபலமான ஸ்ரீநிதி, தமிழ் சினிமாவில் ‘கோப்ரா’ மூலமாக அறிமுகமானவர். இவர் ‘ஏகே 64’ல் நடிக்க ஒப்புக் கொண்டால், அஜித்–ஸ்ரீநிதி ஜோடி புது காம்போவாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாவாத நிலையில், இந்த கூட்டணிக்கு எதிர்நோக்கும் உற்சாகம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.