ஐதராபாத்: ஆலியாபட் தயாரித்து நடித்த பாலிவுட் திரைப்படம் ஜிக்ரா. இப்படம் அக்டோபர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் புரமோஷன் நிகழ்ச்சி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், “ரஜினிகாந்த்துக்கு பிறகு நடிகை சமந்தாவுக்கு தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே மாதிரியான ரசிகர்கள் இருப்பதாக நினைக்கிறேன்.
இதை நான் முழு மனதுடன் சொல்கிறேன். நீங்கள் ஒப்புக்கொண்டால், உங்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை உருவாக்க நான் தயாராக இருக்கிறேன். இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டூர் காரம்’.
இதையடுத்து, ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுவுடன் மீண்டும் இணையவுள்ளார். இப்படம் 2026-ல் வெளியாகும் எனத் தெரிகிறது.
திரிவிக்ரம் பேச்சு மூலம் அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.