சென்னை: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. இதையடுத்து அஜித் தனது அடுத்த கார் பந்தய போட்டிக்கு தயாராகிவிட்டார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டதும் தெரிந்தது, இந்தியா சார்பில் ‘அஜித் குமார் ரேசிங் டீம்’ பங்கேற்று மூன்றாமிடம் பிடித்தது.
இதையடுத்து, இத்தாலியில் நடந்த கார் பந்தயத்திலும் அஜித்குமார் ரேசிங் டீம் பங்கேற்று, அதிலும் மூன்றாமிடம் பிடித்தது. இந்நிலையில் அடுத்ததாக ஜிடி4 ஐரோப்பிய தொடருக்கு தயாராகி வருகிறார். இதற்காக அவர் காரை தயார் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் மூன்றாவதாக வந்துள்ள அஜித்தின் கார் ரேஸ் அணி இந்த போட்டியில் முதலிடத்தை பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.