சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. செப்டம்பர் இறுதியிலோ அல்லது அக்டோபர் தொடக்கத்திலோ படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்திய தகவலின்படி படம் நிறுத்தப்படலாம் என பேசப்படுகிறது.

அஜித் கடைசியாக நடித்த “குட் பேட் அக்லி” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் பணி ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதனால் அஜித்தின் அடுத்த படத்தையும் அவர் இயக்குவார் என கூறப்பட்டபோது, ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.
ஆனால் பிரச்னை என்னவென்றால், இந்த புதிய படத்தில் சம்பளமாக பணம் பெறாமல், அதற்கு பதிலாக சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமங்களைத் தரும்படி அஜித் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், திட்டத்தில் இருந்து பின் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர், தியேட்டரிக்கல் வசூல், ஆடியோ ரைட்ஸ் போன்ற வழிகளில் முதலீட்டை மீட்டெடுப்பதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த நிபந்தனை சிரமத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த விவகாரம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு பேச்சுக்கள் பரவலாகக் கேட்கப்படுகிறது. சிலர் படத்தை டிராப் செய்துவிடலாம் என கூற, இன்னொரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன எனவும் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் இந்த குழப்பத்தை தெளிவு செய்யும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.