சென்னை: நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு ரூ.350 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் ரிலீஸ் செய்வதற்கு ரெடியாக உள்ளது.
சினிமா மட்டுமின்றி தற்போது தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார் அஜித். சமீபத்தில் இவர் துபாயில் நடந்த கார் ரேஸில் 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை பாராட்டி சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியிருக்கிறது மத்திய அரசு. பத்ம பூஷன் விருது வென்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் குமாரின் சொத்து மதிப்பு ரூ.350 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவரிடம் பல சொகுசு கார்கள் உள்ளன. இதை தவிர அஜித் சென்னையில் பல கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா ஒன்றையும் கட்டி இருக்கிறார்.