தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மற்றும் சிலம்பரசனின் 49-வது படத்தை டான் பிக்சர்ஸ் மூலம் தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். அடுத்து அவர் தயாரித்து இயக்கும் படத்துக்கு ‘இதயம் முரளி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார். பிரக்யா நாக்ரா, ரக்ஷன், கயாது லோஹர், பரிதாபங்கள் சுதாகர், ராபர்ட், ஏஞ்சலினா, ஜோனிதா காந்தி, இசையமைப்பாளர் தமன், நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிட செல்வம் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். டைட்டில் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் அதர்வா, “ஒரு காதல் கதை என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். ‘இதயம்’ என் தந்தையின் புகழ் பெற்ற தலைப்பு முரளி, எனக்குள் இதயம் முரளி இருக்கிறார்.
அவர் எல்லோரிடமும் இருக்கிறார். அதை கொண்டாடும் வகையில் இது ஒரு அழகான காதல் கதையாக இருக்கும். ஆகாஷ் பெரியா தயாரிப்பாளர். எனக்கு அவரை ஒரு இயக்குனராக மட்டுமே தெரியும். அவர் இந்த கதையை 2017 இல் கூறினார், அது நடக்கவில்லை, பின்னர் அவர் தயாரிப்பாளராக ஆனார். இப்போது இந்தப் படத்தை உருவாக்குவோம் என்றார். நான் மகிழ்ச்சியாக இருந்தேன். கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும்” என்றார்.