‘புஷ்பா 2’ படத்திற்குப் பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் அட்லீயின் அடுத்த படத்தை இயக்குகிறார். அல்லு அர்ஜுனின் 22-வது படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த அறிவியல் புனைகதை படம் ‘பான் வேர்ல்ட்’ படமாக இருக்கும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. அங்கு 3 மாதங்கள் படப்பிடிப்பு தொடரும் என்று கூறப்படுகிறது. அங்கு, பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் உட்பட உரையாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதை முடித்த பிறகு, விபிஎக்ஸ் காட்சிகளுக்காக படக்குழு அமெரிக்கா செல்லும்.