சென்னை: ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு மறைமுக ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன்-3 படத்தை முடிக்காமல், ஷங்கர் கேம் சேஞ்சரை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்றும், ஷங்கர் மேலும் ரூ.65 கோடி கேட்கிறார் என்றும் லைகா பிலிம்ஸ் இந்தியத் திரைப்படத் தொழில் கூட்டமைப்பில் புகார் அளித்துள்ளது.
இந்தியன்-3ஐ முடிக்க மீதமுள்ள காட்சிகள் மற்றும் பாடல்களை படமாக்காமல் இந்தியன்-3 படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என ஷங்கர் தெரிவித்துள்ளார். வரும் 10-ம் தேதி வெளியாகும் கேம் சேஞ்சர் படத்தின் தியேட்டர் ஒப்பந்தம் தமிழகத்தில் இன்னும் தொடங்கவில்லை.