சென்னை: 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டிற்கான இந்த விருதுகளில், இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு ஆகிய 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ படத்திற்காக ரிஷப் ஷெட்டி வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்) ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 16) வெளியாகியுள்ளது. அதன் விளக்கம்:
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவு – ரவிவர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒலி வடிவமைப்பு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் மேகம் கருகடா பாடல் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பரிவ் (கேஜிஎஃப் 2)
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
சிறந்த கன்னடத் திரைப்படம் – KGF 2
சிறந்த மலையாளத் திரைப்படம் – சவுதி வில்லிகா
சிறந்த திரைக்கதை – ஆனந்த் ஏகர்ஷி (கேம் – மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகி – பாம்பே ஜெய்ராஸ்ரீ (சவுதி வல்லிக்கா – மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகர் – அர்ஜித் சிங் (பிரம்மாஸ்திரா – இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபாத் (மாலிகாபுரம் – மலையாளம்)