சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் “சக்தித் திருமகன்” டீசர் வெளியாகும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் டீசர் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். ‘காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான ‘காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘ஹிட்லர், ரோமியோ, மழைபிடிக்காத மனிதன்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் இவர் தற்போது தனது 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ‘பராஷக்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் டீசர் நாளை 12ம் தேதி மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
,