தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் விஜய் விஸ்வாவுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் சுதந்திர தின வரவேற்பு மற்றும் கவுரவம் அளிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த விஜய், ‘கேரள நாட்டிலம் பெண்களுடனே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் ‘டூரிங் டாக்கீஸ்’, ‘சாகசம்’, ‘பட்டதாரி’, ‘பிகில்’, ‘மாயநதி’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘சாயம்’ என பல படங்களில் நடித்தார்.
நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் நகரில் நடந்த சுதந்திர தின விழாவில் அமெரிக்க தமிழ் சங்கம் விஜய்யை கிராண்ட் மார்ஷலாக நியமித்து கவுரவித்தது. இந்நிகழ்ச்சியானது இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை கலாச்சார காட்சிகள் மற்றும் சமூக உணர்வோடு கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் விஸ்வா மார்ஷலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் அவரது ரசிகர்கள். அப்போது அவருக்கு ‘இலாம் பாரி’ விருது கிடைத்தது, இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை அமெரிக்கர்கள் பாராட்டினர்.
நிகழ்ச்சியில், நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் கதிர்வேல் குமாரராஜா, குயின்ஸ் இந்தியா டே பரேட் கமிட்டி தலைவர் கோஷி ஓ தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு விஜயை வரவேற்றனர்.
அமெரிக்காவில் தமிழர்களின் பெருமையை உயர்த்தும் வகையில் இந்த வரவேற்பு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.