அனுஷ்கா ஷெட்டியின் ‘காட்டி’ படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜகபதி பாபு, ஜான் விஜய் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதை க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர், அது ஜூலை 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இப்போது, அதன் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான யுவி கிரியேஷன்ஸ் வெளியிட்ட பதிவில், படத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது, மேலும் புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.