ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், இந்திய அரசு மற்றும் இந்திய ராணுவம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலின் எதிரொலியாக, ஹிந்தி திரைப்படமான அபீர் குலால் க்கு தடை விதிக்கக் கோரி பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த படத்தில் இந்தி நடிகை வாணி கபூர் மற்றும் பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை கடக்கும் காதலர்களின் கதையை மையமாக கொண்டுள்ளது. காஷ்மீரில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்த படத்திற்கு தடை கோரி குரல்கள் உயர்ந்துள்ளன. இதற்குக் காரணமாக படத்தின் கதை அம்சம் மட்டுமின்றி, ஹீரோவாக நடித்த பவாத் கான் ஒரு பாகிஸ்தானியர் என்பதும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து பவாத் கான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.