சென்னை : நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா தன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது. எதற்காக தெரியுமா?
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகையும், சின்னத்திரை தொகுப்பாளருமான அர்ச்சனா இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த அவரது தாயுடன் இருப்பது போன்ற புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டது. இதைக் கண்ட அவர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கதறி அழுதார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.