சென்னை: விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவும், அவரது மகள் சினேகா பிரிட்டோவும் இணைந்து தயாரிக்கும் படம் ‘நேசிப்பாயா’. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோச்சலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது:- மாமனார் அமைவது கடவுள் கொடுத்த வரம். ஆகாஷ் முரளிக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம். அவருக்கு உதவியாக அவரது மாமனார் சேவியர் பிரிட்டோ இருக்கிறார். உன் அப்பா முரளிக்கு கொடுத்த இடத்தை உனக்கும் தருவார். மாமனார் என்று அழைப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
அவர் என் தாய் மாமாவாக இருந்தாலும், என்னை நம்பி அவரது மகள் ஆர்த்திக்கு திருமணம் செய்து வைத்தது பெரிய விஷயம். அப்போது எனக்கு நிலையான வேலை இல்லை. டிவியில் ஒரு எபிசோடுக்கு ரூ.4,500 கொடுப்பார்கள். என் மாமனார் என்னை நம்பி, அவ்வளவு சம்பாதிச்சாலும் பரவாயில்லை என்று எனக்கு ஆதரவாக இருந்தார். அதனால்தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். இந்த மேடையில் என் மாமனாருக்கு நன்றி கூறுகிறேன்.
அவருக்கு 43 வயதில் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதுதான் என் தந்தை இறந்த நேரம். என் மாமாவுக்கு 2 மகள்கள் இருந்தனர். நானும் என் தங்கையும் வீட்டில் இருந்தோம். எனவே, எங்களைக் கவனித்துக் கொள்வதற்காக அவர் தனது வேலையைத் தியாகம் செய்தார். அவர் சொல்லவில்லை, ‘சும்மா படிங்க. வேலைக்குப் போய் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதி என்று சொல்லவில்லை.’ உன் கனவை நோக்கிப் போ’ என்று எனக்குள் நம்பிக்கையை விதைத்தார். ஆகாஷ் முரளிக் எனக்கு கிடைத்ததைப் போன்ற அற்புதமான மாமனார் கிடைத்துள்ளார். அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.