பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ், மாரடைப்பால் திடீரென மரணமடைந்த நிலையில், அவரை பற்றிய பல மறைக்கப்பட்ட தகவல்கள் தற்போது வெளியரங்கமாகியுள்ளன.
பாரதிராஜா, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவரது மகன் மனோஜ், சினிமா மீது கொண்ட ஆர்வத்துடன் அமெரிக்காவில் நடிப்புப் பயிற்சி பெற்று, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதன் மூலம், சினிமா துறையில் முன்னேறும் வண்ணம் தனது திறமைகளை வளர்த்தார்.

பாரதிராஜா, தனது மகன் மனோஜை ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார். மனோஜ், சினிமாவில் வெற்றிகரமான பிரவேசம் செய்தபினும், அவர் படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அதேசமயம், அவர் பல இயக்குனர்களுடன் பணியாற்றி, அனுபவம் குவித்தார்.
மனோஜ், இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் படமான ‘எந்திரன்’ படத்திலும் நடித்துள்ளார். இதில், ரஜினிகாந்திற்கு டூப்பாக மனோஜ் நடித்த காட்சிகள் சமீபத்தில் வைரலாகியுள்ளது.