தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த மெஹ்ரீன் பிர்ஸடா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையில் காணப்படாமல் இருந்தார். தற்போது வசந்த் ரவியின் ஹீரோவாக நடிக்கும் “இந்திரா” படத்தில் அவர் நாயகியாக நடித்து உள்ளார்.

மெஹ்ரீன் பிர்ஸடா தனது திருமண நிச்சயதார்த்தத்தால் செய்தி தலைப்பாக மாறினார். ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாயின் மகனுமான பாவ்யா பிஷ்னாயுடன் நிச்சயதார்த்தம் செய்து அதனை பிரம்மாண்டமாகக் கொண்டாடினார். ஆனால் அதிரடியாக அந்த திருமணத்தை நிறுத்தியதிலிருந்து, சினிமாவில் மீண்டும் இணைவதாக தெரிகிறது.
அதற்குப் பிறகு, இவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தற்போது வசந்த் ரவியுடன் நடித்துள்ள “இந்திரா” திரைப்படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சபரிஷ் நந்தா இயக்கியுள்ள இந்த படம் சைக்கோ-த்ரில்லர் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையாக உருவாகியுள்ளது. இதில் வில்லனாக சுனில் மற்றும் முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்திரன் நடித்துள்ளனர்.
மெஹ்ரீன் பிர்ஸடாவின் திரும்பும் படம் என்ற வகையில் ‘இந்திரா’ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் நோட்டா, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த இவரது மீள்பதிவு கோலிவுட்டில் வரவேற்கப்படுகிறது.