தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து அரசியல் மேடையில் களம் இறங்கிய நடிகர் விஜய், கரூரில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த துயரத்தின் பின், விஜய் சமூக வலைதளங்களில் குறைந்த அளவில் மட்டுமே தோன்றி வருவதால், அவரை நோக்கி பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில், விஜய் கரூரிலோ அல்லது திருச்சியிலோ தங்கி மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறியிருக்கலாம், அனுமதி தரவில்லை என்றால் ஊடகங்கள் மூலம் குறைந்தபட்சம் பேட்டி கொடுத்திருக்கலாம் என குறிப்பிட்டார். மேலும், தாமதமாக நடந்த நடவடிக்கைகள் காரணமாக கட்சி நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் சாடினார்.
அவரது பதிவில், “தலைமறைவு வாழ்க்கை கழகம்” என்ற பெயரைப் பயன்படுத்தி, விஜயின் “தமிழக வெற்றிக் கழகத்தை” கேலி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் மீது வரும் விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர் விரைவில் பொதுவெளியில் விளக்கம் அளிப்பாரா என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகும் “ஜன நாயகன்” படம் பொங்கல் பண்டிகைக்கு முன் வெளியாக உள்ளது. ஆனால் கரூர் சம்பவம் மற்றும் விமர்சனங்களால் படம் வெளியீடு சிக்கலில் சிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.