பையா, கருங்காலி, V3 உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி, ‘பிஎம்டபிள்யூ 1991’ படத்தை இயக்குகிறார். பொன்முடியுடன், மணிமேகலை, சிறுவன் கௌதம் மற்றும் சாப்ளின் பாலு ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
கிரீன் விஸ் சினிமா சார்பாக வில்வங்கா தயாரித்த இந்தப் படம், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 22 விருதுகளை வென்றுள்ளது.

படத்தைப் பற்றிப் பேசுகையில், பொன்முடி திருமலைசாமி, “சைக்கிள் என்பது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஒரு காலத்தில், சைக்கிள் வைத்திருப்பது ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது.
பலர் அதை ஒரு கார் போலக் கருதினர். அதைச் சுற்றியே கதையை உருவாக்கினேன். படத்தை திரையரங்குகளில் வெளியிடும் பணி நடந்து வருகிறது.”