ஹைதராபாத்: பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மன்ச்சு, மோகன் பாபு, சரத் குமார், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. மோகன் பாபு தயாரித்துள்ளார். பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் நிலையில், திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. படத்திற்கான கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 25-ம் தேதி திரைக்கு வரவிருந்த ‘கண்ணப்பா’ திரைப்படம் இறுதிக்கட்டப் பணிகள் தாமதம் ஆனதால் வெளியாகவில்லை. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என விஷ்ணு மன்ச்சு தெரிவித்துள்ளார்.