சமீபத்தில் மறைந்த இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கிய படம் ‘குழந்தைகள் முன்னேற்ற சங்கம்’. குழந்தை நட்சத்திரங்கள் இமயவர்மன், இயக்குனர் ஷங்கர் தயாள் மகன் அத்வைத், ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபுவும், செந்திலும் இணைந்து நடித்துள்ளனர். சரவணன், சுப்பு பஞ்சு, லிசி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கின்றனர். குழந்தைகள் உலகை மையமாக வைத்து அரசியல் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘சாதக பறவைகள்’ ஷங்கர் இசையமைத்துள்ளார்.
மீனாட்சி அம்மன் மூவீஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம் தயாரித்து ஷங்கர் தயாள் இயக்கியுள்ள இப்படம் வரும் 24-ம் தேதி வெளியாகிறது.