சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஸ்வம்பாரா’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மேலும், இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. இந்நிலையில், சிரஞ்சீவி தனது அடுத்த படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

அனில் ரவிபுடி இயக்கவுள்ள இப்படத்தின் பூஜை உகாதி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி இயக்குனர்கள் மற்றும் வெங்கடேஷ் கலந்து கொண்டு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. அனில் ரவிபுடி இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
குறிப்பாக, இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்தூனாம்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு முதல் ஓடிடி வரை அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.