சென்னை : தளபதி சிவகார்த்திகேயன் என்று அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. தளபதி என்று ரசிகர்கள் விஜயை தான் குறிப்பிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், ‘அடுத்த தளபதி சிவகார்த்திகேயன்தான்’ என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் புகைப்படத்துடன் ‘தளபதி’ என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது. வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள். இதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து திருச்சி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
விஜய்யின் கோட் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.