விஜய் நடித்துவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், கொடைக்கானலில் நடைபெறும் இறுதிக்கட்ட படப்பிடிப்புடன் தீவிரமாக தயாராகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், விஜயின் கடைசி திரைப்படமாக கருதப்படுகிறது. கமர்ஷியல் கூறுகளுடன் கூடிய அரசியல் படம் எனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ ஜனவரி மாதத்தில் திரைக்கு வர உள்ளது.

இப்போது நடைபெறும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில், விஜய் வின்டேஜ் லுக்கில் தோன்றுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அந்த லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் இந்த காட்சிக்காக தனது தோற்றத்தை முழுமையாக மாற்றியிருப்பதும், இது ரசிகர்களுக்கு ஒரு பார்வை விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடித்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேர்தலுக்கு முன் வெளியாகும் இப்படம், அரசியல் அடையாளத்துடன் விஜயின் ரசிகர்களுக்கு ஒரு விழாக்கோலமாக அமைவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் இதன் பிறகு முழுமையாக அரசியலில் இறங்கவுள்ளதாலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கலாம்.